சீனா ஆக்கிரமிப்பு குறித்து பூடான் மறுப்பு

புதுடெல்லி: சிக்கிம் மாநிலம் டோக்லாமுக்கு அருகில் உள்ள பூடானுக்கு சொந்தமான பகுதியில் இரண்டு கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகின. இதுகுறித்த வரைபடத்தை சீனாவின் அரசு ஊடகத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஷென் சிவெய் தனது டிவிட்டரில் வெளியிட்டு, திடீரென நீக்கினார்.

ஆனாலும், சர்வதேச கவனம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனா ஆக்கிரமித்து அமைத்துள்ள கிராமத்தில் விரைவில் சீனர்கள் குடியேறப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகவலை பூடான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘இது அப்பட்டமான பொய். பூட்டானுக்குள் சீனா ஊடுருவவும் இல்லை. ஆக்கிரமிக்கவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: