×

காங்கிரசில் 3 சிறப்பு குழுக்கள்

புதுடெல்லி: அரசியல் ரீதியிலான முக்கிய பிரச்னைகளை விவாதிக்கவும், முடிவெடுக்கவும் மூன்று சிறப்பு குழுக்களை காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரான வேணுகோபால் கூறியதாவது:பொருளாதாரம், வெளியுறவு, தேசிய பாதுகாப்பு என மூன்று பிரிவுகளுக்கும் காங்கிரசில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய்சிங் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பொருளாதாரக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவில் ஆனந்த் சர்மா, சசி தரூர், சல்மான் குர்ஷித் மற்றும் சப்தகிரி உலகா உள்ளனர்.  தேசிய பாதுகாப்புப் பிரிவில் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, வின்சென்ட் எச் பாலா, வைத்திலிங்கம் சேர்க்கப்பட்டுள்ளனர்.அரசியல் ரீதியிலான மிக முக்கியமான இந்த மூன்று விஷயங்களையும் மேற்கண்ட சிறப்பு குழுவினர் விவாதித்து கட்சித்தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள்.இவ்வாறு கூறினார். இந்த மூன்று வெவ்வேறு குழுவிலும் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Special Committees ,Congress , In Congress 3 special groups
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...