அரசு கட்டிடத்துக்கு பூமி பூஜை அமைச்சர்கள் ஆப்சென்ட்

புழல்: சென்னை புழல், பாலாஜி நகரில் மாதாவரம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது.இவ்வளாகத்தில், புதிதாக கோட்டாட்சியர் அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, நேற்று காலை 11.45 மணியளவில் புதிய அலுவலக கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும், அவர்கள் மதியம் ஒரு மணிவரை வராததால், சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி பூமி பூஜையில் கலந்து கொண்டு, புதிய அலுவலக கட்டுமானப் பணிகளைதுவக்கி வைத்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>