பேரறிவாளனை விடுதலை செய்ய விஜய் சேதுபதி வேடுகோள்

பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் பேரறிவாளன். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி, அதில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு தமிழக கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனை ஆண்டு கால போராட்டத்துக்கு விடிவு ஏற்பட வேண்டும். இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Related Stories:

>