×

உடல் நிலை குறித்த உண்மையை மறைத்து பொய்யுரை பரப்ப வேண்டாம்: பூங்கோதை ஆலடி அருணா அறிக்கை

சென்னை: தனது உடல்நிலை குறித்த உண்மையை மறைத்து தவறாக திரித்து பொய்யுரை பரப்ப வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஆலங்குளத்தில் கடந்த 19ம்தேதி உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இதை தவறாக திரித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டது போல் பொய்யுரை பரப்புவது வேதனை அளிக்கிறது. இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி, என்னை வளர்த்துள்ள திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்றும், என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள், ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டு கொள்கின்றேன்.


Tags : Do not spread lies by hiding the truth about physical condition: Gardener Alladi Aruna Report
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...