வேல் யாத்திரை 8வது நாளாக முருகன் கைதாகி விடுதலை

ஈரோடு: ஈரோட்டில் வேல் யாத்திரை செல்ல முயன்ற பா.ஜ. மாநிலத் தலைவர் முருகனை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு விதித்துள்ள தடையை மீறி   பா.ஜ. சார்பில் வேல் யாத்திரை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் பாஜ தலைவர்கள் கைதாகி உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர்.  ஈரோடு சம்பத் நகரில் இருந்து நேற்று யாத்திரை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாநிலத்தலைவர்  முருகன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். பின்னர், யாத்திரை புறப்பட்ட மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோரை போலீசார் கைது  செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து, பின்னர் மாலையில் விடுவித்தனர். எல்.முருகன் வேல் யாத்திரை சென்றதற்காக நேற்று 8வது நாளாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>