தீபாவளிக்கு சிறப்பு இயக்கம் 28,360 பஸ்களில் 13 லட்சம் பேர் பயணம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட 28,360 பேருந்துகள் வாயிலாக 13,24,553 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 11, 12, 13 ஆகிய தேதிகளில் மொத்தமாக 13,317 பேருந்துகள் வயிலாக, 6,25,553 பயணிகள் பயணம் செய்துள்ளனர். தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், கடந்த 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 10,414 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,68,000 பயணிகளும்,  பல்வேறு இடங்களிலிருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4,629 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,31,000 பயணிகளும் என மொத்தமாக 15,043 பேருந்துகள் வாயிலாக, 6,99,000 பயணிகள் பயணம் செய்தனர்.

கடந்த 7 நாட்களில், , 13,24,553 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.  இதன் வாயிலாக மொத்தமாக 5 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Related Stories:

>