உலக சாதனை படைத்த சிறுமி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை:  சங்க இலக்கியத்திலிருக்கும் 100 பூக்களின் பெயர்களையும்-ஆசியா கண்டத்தில் உள்ள அனைத்து நாட்டின் தலைநகரங்களையும்-இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் பெயர்களையும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் 2.10 நிமிடங்களில் ஒப்பித்து ஜெட்லி உலக சாதனை படைத்தவர் மயிலாப்பூரை சேர்ந்த 5 வயது சிறுமி ஏ.பி.ஹன்னோ ப்ரிசா. இவரது பெற்றோர் பிரகாஷ்-ஆனி ரென்ஷா.  அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சிறுமி ஹன்னோ ப்ரிசா தனது குடும்பத்தினருடன் நேற்று சந்தித்தார். தான் செய்த சாதனையை ஸ்டாலின் முன்பு சொல்லிக் காட்டினார். அவருக்கு கலைஞரின் மார்பளவு சிலையை ஸ்டாலின் பரிசளித்தார்.

 திருச்சபை நிர்வாகிகள் சந்திப்பு: கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில், பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்ற பிரதம பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப் மற்றும் பெந்தெகொஸ்தே திருச்சபை பொது செயலாளர் ஆயர் வினில் சதீஷ்,  இணை செயலாளர் சைமன் சேகரன், துணை தலைவர் ஜோயல் சேகரன், இணை செயலாளர் டேனியல் சபையர், மண்டல பொறுப்பாளர் ஆபிரகாம், அரசியல் பிரிவு செயலாளர் செல்வம் ஜோசப், அரசியல் பிரிவு இணை செயலாளர் ஹரிதாஸ் லாசர், இளைஞர் அணி ஐசக் டேனியல், கிழக்கு சென்னை பேராய தலைவர்,  ஜான் ஜெபராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து கிறிஸ்தவர்களின் நலன் குறித்த கோரிக்கைகள் வைத்தனர்.

Related Stories:

>