×

தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில், மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா : அகமதாபாத்தில் இரவுநேர முழு ஊரடங்கு

அகமதாபாத், :தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதால், அகமதாபாத்தில் இரவுநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் பாதிப்பை தடுப்பதற்காக மார்ச் 25ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்த நிலையில், பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய பின்னர் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. தீபாவளி போன்ற பண்டிகையால் கடந்த சில வாரங்களாக மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்று வந்ததால், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் அறிவிப்பை அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அகமதாபாத் மாநகராட்சி முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கிட்டதிட்ட 8 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,celebrations ,Deepavali ,Ahmedabad , Deepavali, Corona, Ahmedabad, full curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...