×

அரியானாவில் 3ம் கட்ட பரிசோதனை :‘கோவாக்சின்’ ஊசி போட்டுக் கொண்டார் அரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்!!

அம்பாலா, :‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை அரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது. அரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் அனில் விஜுக்கு, அம்பாலா கான்ட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டது. அவருக்கு தடுப்பூசி போடும் முன், மருத்துவக் குழுவினர் அவரது உடலை பரிசோதனை நடத்தினர். கோவிட் -19 மாநில நோடல் அதிகாரி டாக்டர் துருவ் சவுத்ரி, முதன்மை ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர் சவிதா வர்மா, இணை புலனாய்வாளர் டாக்டர் ரமேஷ் வர்மா ஆகியோர் கொண்ட குழுவினர் இப்பணியை ேமற்கொண்டனர்.

மூன்றாம் கட்டமாக நடக்கும் இந்த பரிசோதனையில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படும். அதாவது முதல் தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்படும். ஆன்டிபாடிகள் 48 நாட்களுக்குப் பிறகு அவர்களின் உடலில் சோதிக்கப்படும். சரியான முடிவு பெறப்பட்டால், நாடு முழுவதும் மொத்தம் 25,800 தன்னார்வலர்களுக்கு இந்த டோஸ் வழங்கப்படும். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு தடுப்பூசி சந்தையில் வரக்கூடும் என்று ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  



Tags : Haryana ,Health Minister ,Kovacs , Haryana, Kovacsin, Haryana, Minister
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...