×

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக அரசு : என்.ஆர்.தனபாலன் பாராட்டு

சென்னை, :பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி மருத்துவ படிப்பில் 7.5 சதவிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியதின் விளைவாக இன்று தமிழகத்தில் 405 பேருக்கு மருத்துவராக வாய்ப்பு கிடைத்துள்ளது. பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் மட்டுமே படித்து வந்த மருத்துவ கல்வி இன்று சாதாரண கூலித்தொழிலாளி, ஆட்டோ டிரைவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் போன்று அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள் அரசு பள்ளிகளில் மட்டுமே பயின்று நீட் தேர்வில் வெற்றியும் பெற்று இன்று சாதாரண மாணவர்களும் சாமானியர்கள் ஆகலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்த தமிழக முதல்வரையும், அரசையையும் பாராட்டுகிறேன்.

இந்த நடப்பு கல்வியாண்டில் 405 மாணவர்களில் தொடங்கி வரும் கல்வியாண்டுகளில் படிப்படியாக உயர்வதன் மூலம் அரசு பள்ளிகளின் மகத்துவமும், ஆசிரியர்களின் சேவையையும் அனைத்து பெற்றோர்களுக்கும் புரிந்து வருவதோடு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயரத்தொடங்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Government ,government school students ,Tamil Nadu ,NR Dhanabalan , Government School Students, Medical Dream, Government of Tamil Nadu, NR Dhanabalan, Appreciation
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்