×

இந்திய - சீன பதற்றத்துக்கு மத்தியில் பூட்டான் எல்லையில் சீனர்கள் குடியேற்றம்

புதுடெல்லி, :இந்திய - சீன பதற்றத்துக்கு மத்தியில் பூட்டான் எல்லையில் சீனர்களை குடியேற்ற வைத்துள்ளதால், திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் பல மாதங்களாக நீடித்து வருகிறது. பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்நிலையில் கிழக்கு லடாக்கில் உள்ள தனது எல்லையில் சீனா வலிமையை அதிகரித்துள்ளது. அதாவது, இமாச்சல பிரதேசத்தின் கவுரிக் பாஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தில் டெல் I மற்றும் II வரை ராணுவ தளவாடங்களை குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தின் பரஹோட்டி சமவெளிகளுக்கு வடக்கே உள்ள லா-வில் (பூட்டான் எல்லை) சீன துருப்புக்களின் சார்பில் புதிய கொள்கலன் வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சீனர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் (எல்ஐசி) இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. டெமொக் எல்.ஐ.சியில் இருந்து 82 கி.மீ தொலைவில் உள்ள ஷிகுவான்ஹே மற்றும் கார் குன்சா விமான நிலையம் வழியாக துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கான முக்கிய மையமாகும். இந்திய இராணுவ வல்லுநர்களின் கூற்றுப்படி, டோல்காமிலிருந்து பரஹதி சமவெளிக்கு தளவாடங்களை அனுப்பக்கூடிய இடத்தில் ஷிகுவான்ஹே அமைந்துள்ளது.

சீனாவின் அரசு  அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஊடகத்தில் இந்த கிராமத்தின் படங்கள்  பதிவிடப்பட்டுள்ளன. முதலில் இது டோக்லாம் பகுதி என்று கூறப்பட்டு, பின்னர்  அதன் சரியான இடம் பூட்டான் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், பூட்டான் எல்லையில் ஓர் கிராமத்தை அமைத்து சீனர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதால் எல்லையில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



Tags : Chinese ,Indo ,Bhutan , Indo-Chinese tension, Bhutan border, Chinese, immigration
× RELATED மதுரையில் தனியார் உணவகம் சார்பில் சீன...