×

மதுரையில் தீயணைப்பு வீரர்கள் பலியான விவகாரம் : ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

மதுரை, :பணியின் போது இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் பலியானது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென முறையிடப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, தீபாவளி தினத்தன்று அதிகாலை மதுரை தெற்கு மாசி வீதி பகுதிலுள்ள ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

மதுரையில் பல்ேவறு பகுதியில் உள்ள வணிக கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பழமையானவையாக இருப்பது தெரியவந்துள்ளது. உரிய விளக்கம் கேட்டு மதுரையிலுள்ள 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாமலும், உரிய தகுதிச் சான்றும் பெறாமல் பல கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் விபத்து ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவை முறையாக ஆய்வு செய்யப்பட்டு, சான்று பெறப்பட்டிருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், உயிரிழப்பையும் தடுத்திருக்கலாம். இது குறித்த செய்தி, தினகரன் நாளிதழில் வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் அடிப்படையில் நீதிமன்றமே தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டும்,’’என்றார். இது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags : Firefighters ,branch ,Madurai ,ICC , Madurai, firefighters, killed
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...