×

கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் பிரதமர் மோடியின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது :பூட்டான் பிரதமர் நெகிழ்ச்சி!!

டெல்லி : ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூட்டான் பிரதமர் லயன்ச்சென் டாக்டர் லோட்டே ஷெரிங் ஆகியோர் காணொலி மூலம் துவங்கி வைத்தனர். பூட்டானுக்கு அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 2019-இல் பிரதமர் சென்றிருந்த போது ரூபே திட்டத்தின் முதல் பகுதியை இரு பிரதமர்களும் தொடங்கி வைத்தனர். ரூபே அட்டைகள் பூட்டானில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் பூட்டான் முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் விற்பனை முனையங்களை இந்தியாவில் இருந்து பூட்டானுக்கு செல்பவர்கள் பயன்படுத்த முடியும். இத்திட்டத்தின் இராண்டாம் கட்டம் மூலம் பூட்டானில் இருந்து இந்தியா வருபவர்கள் இங்குள்ள ரூபே மையங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பூடான் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் பணியில் அந்நாட்டுக்கு இஸ்ரோ உதவி வருகிறது.அடுத்த ஆண்டு பூடானில் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.செயற்கைக்கோள் பணிக்காக பூடானில் 4 விண்வெளி பொறியாளர்கள் டிசம்பரில் இஸ்ரோ செல்ல உள்ளனர்.செயற்கைகோள் திட்டத்திற்காக இஸ்ரோவில் பயிற்சி பெறும் பூட்டான் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பூட்டான் பிரதமர் பேசியதாவது:-கொரோனா தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு தயாரானவுடன், பூட்டானுக்கு தடுப்பூசி கிடைக்கும் என உறுதி அளித்தமைக்காக தங்களுக்கும் (மோடி) தங்கள் அரசாங்கத்திற்கும் நன்றி. தொற்றுநோயைக் கையாள்வதில் பிரதமர் மோடியின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது. தொற்றுநோயிலிருந்து இந்தியா மிகவும் வலுவாக மீண்டு வரும் என்று நான் நம்புகிறேன். தடுப்பூசிகளை மேம்படுத்துவதில் இந்தியா எடுக்கும் முயற்சிகள், நம் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, என்றார்.


Tags : Modi ,corona epidemic ,Bhutan , Corona, Prime Minister Modi, Bhutan, Prime Minister
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்ற பிரதமர்...