வைகையாற்றில் ரசாயன கழிவுநீர்?

மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மதுரை வைகையாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஓபுளா படித்துறை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி வழிந்து ஓடுகிறது. இந்த தண்ணீரிலிருந்து நுரை பொங்கி  ஓடுகிறது. இது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக வைகையாற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்த கழிவுநீர், சிறு தொழில் செய்யும் இடங்களில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் சாக்கடை தண்ணீர்,  வைகை ஆற்றில் கலப்பதால் வைகை ஆறு மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே நேற்று ஆற்றில் தண்ணீர் ஓடும் பகுதியில் அதிகளவில் நுரை பொங்கியதால், ரசாயன கழிவுகளால் தான் நுரை பொங்கி ஓடி வருகிறது என இப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, கழிவு நீர் கலக்காதவாறு தூய்மையாக வைகை ஆற்றை பராமரித்து ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>