×

கொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டன. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த பலத்த காற்றால் நேற்று முன்தினம் மலைப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இதனால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில் ஆபத்தாக விழும் நிலையில் உள்ள மரங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் டைகர் சோலை பகுதியில் உள்ள ஆபத்தான மரம் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று செண்பகனூர் அருகே கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் இணைந்து அகற்றினர். இப்பணியால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் ஆபத்தாக உள்ள மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Removal ,Kodaikanal , Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...