பூடான் நாட்டின் செயற்கைகோள் இஸ்ரோ உதவியுடன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: பூடான் நாட்டின் செயற்கைகோள் இஸ்ரோ உதவியுடன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பூடான் விண்வெளி பொறியாளர்கள் 4 பேருக்கு இஸ்ரோவில் டிசம்பரில் பயிற்சி அளிக்கப்படும். இந்தியா - பூடான் ரூபே கார்டு - 2 இ - லாஞ்ச் திட்ட தொடக்க காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். செயற்கைகோள் திட்டத்துக்காக இஸ்ரோவில் பயிற்சி பெறும் பூடான் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் எனவும் மோடி குறிப்பிட்டார்.

Related Stories: