×

வெள்ளக்கோவில் அருகே சுடுகாடு வசதி இல்லாததால் சடலங்களை ரோட்டில் புதைக்கும் அவலம்

காங்கயம்: வெள்ளக்கோவில் அருகே சுடுகாடு வசதி இல்லாததால் இறந்தவர்களின் சடலங்களை மக்கள் ரோட்டோரம் புதைத்து வருகின்றனர். வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சியாகும், இந்த ஊராட்சி பகுதிக்குட்பட்ட வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் குமரான்டிசாவடி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு சுடுகாடு வசதி இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளித்து கோரிக்கை வைத்தும் இதுவரை பலனில்லை. கடந்த முறை காங்கயம் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வை சேர்ந்த என்.எஸ்.என்.நடராஜ் இருந்தார்.இவரும் இந்த ஊருக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தரவில்லை. பல முறை தங்கள் குறைகளை எடுத்து கூறியும் பயன் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இறந்தவர்களின் சடலங்களை வெள்ளக்கோவில் முத்தூர் மெயின் ரோட்டில் குமரான்டிசாவடி பகுதியில் வேறு வழியில்லாமல் புதைத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுடுகாடு வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், வேறுவழியின்றி ரோட்டோரம் சடலங்களை புதைத்து வருகிறோம். தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் தனியரசு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரும் இதுவரை இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் இப்பிரச்னை எதிரொலிக்கும்’ என்றனர்.

Tags : road ,crematorium ,White Temple , சுடுகாடு
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி