×

ஜன.5 முதல் நேரடி பிரச்சாரத்தை தொடங்குகிறார் மு.க ஸ்டாலின்: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்

சென்னை: ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார் என கே.என்.நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளநிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமை இல்லாத முதல் தமிழக தேர்தல் களம் என்பதால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் களப்பணிகளில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

தி.மு.க.விலும் தேர்தலையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார் என கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் 1,500 பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

அடுத்த 75 நாட்களில் 15 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து பிரச்சாரம் நடைபெறும். 15 தலைவர்கள் அடுத்த 75 நாட்களில் 1,500 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர். திமுக கூட்டணி பலமாக உள்ளது; இதே கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம். திமுக கூட்டணிக்கு புதிய காட்சிகள் வந்தால் அதுபற்றி தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் திமுகவின் நிலை. 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் முன்பே கூறியிருந்தார். அமித்ஷா வருகையைக் கண்டு எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம். மத்திய அரசை கண்டு அதிமுக அரசு தான் பயப்படுகிறது. கட்சியை வளர்ப்பதற்காக வேல் யாத்திரையை பாஜகவினர் நடத்துகின்றனர். திருச்செந்தூர் முருகனின் வேலைக் கண்டுபிடிக்க கோரி அன்று திமுக தலைவர் கலைஞர் நடைப்பயணம் சென்றார் எனவும் கூறினார். இன்று உதயநிதியும், வரும் 29ம் தேதி கனிமொழியும் தேர்தல் பரப்புரையை தொடங்குகின்றனர்.

Tags : MK Stalin ,campaign , MK Stalin launches live campaign from Jan. 5: Stalin's Voice Towards Dawn
× RELATED நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு...