×

தகன மேடை அருகே நின்று சுடுகாடு இடத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள பரவளூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக, மணிமுக்தாற்றின் அருகில் சுடுகாடு அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக சிலர், சுடுகாடு பகுதியை முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு வழியில்லாமல் மணிமுக்தாறு நதிக்கரையில் சடலத்தை புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியினர் மணிமுக்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தனவேல் தலைமையில் நேற்று சுடுகாடு தகன மேடை அருகே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் துணை தாசில்தார் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயபாண்டியன், வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி ஆகியோர் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். உறுதியளித்த நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விரைவில் மிகப் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : protest ,public ,crematorium ,return ,cremation ground , Cemetery
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...