×

எல்லைப்பகுதியில் மீண்டும் சீண்டிப்பார்க்கிறதா சீனா?... பூட்டான் எல்லைப்பகுதியில் அமையும் சீனாவின் நவீன கிராமம்

டோக்லாம்: எல்லை பகுதியான டோக்லாம் அருகே சீனா புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பல இடங்களில் இரு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சுமூகமாக்க ராணுவம் மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் பூட்டான் எல்லை பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கிராமத்தின் புகைப்படங்களும் சீனா ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமம் பூட்டானின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பூட்டான் அரசின் ராணுவம் மிகவும் சிறியது. அதற்கு இந்தியாதான் தொடர்ந்து உதவி வருகிறது. இந்நிலையில் பூட்டானை ஆக்கிரமித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த இந்த கிராமத்தை சீனா உருவாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த புதிய கிராமம் 2017-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே மோதல் நடைபெற்ற டோக்லாமில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


Tags : China ,border ,village ,Bhutan , Is China re-emerging on the border? ... China's modern village on the border with Bhutan
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...