மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடியாக சரிவு

தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 12,000லிருந்து 10,000 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,361 கனஅடியில் இருந்து 10,134 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Related Stories:

>