×

தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 5.72 கோடி ஆக உயர்வு; 13.64 லட்சத்தை தாண்டியது பலி

ஜெனீவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.59 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 5,72,23,059 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,97,14,66 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 64 ஆயிரத்து 868 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1,61,43,529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,01,812 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா   -    பாதிப்பு - 12,070,712, உயிரிழப்பு - 258,333 , குணமடைந்தோர் - 7,243,488
இந்தியா      -    பாதிப்பு - 9,004,325,  உயிரிழப்பு - 132,202,  குணமடைந்தோர் - 8,427,016
பிரேசில்      -    பாதிப்பு - 5,983,089,  உயிரிழப்பு - 168,141,  குணமடைந்தோர் - 5,407,498

பிரான்ஸ்     -     பாதிப்பு - 2,086,288,  உயிரிழப்பு - 47,127, குணமடைந்தோர்  - 147,569
ரஷியா        -    பாதிப்பு - 2,015,608,  உயிரிழப்பு - 34,850,  குணமடைந்தோர்  - 1,526,656
கொலம்பியா   -    பாதிப்பு - 1,225,490,  உயிரிழப்பு - 34,761,  குணமடைந்தோர்  - 1,132,393

Tags : Continuously rising corona vulnerability; Worldwide number of victims rises to 5.72 crore; 13.64 lakh were killed
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...