‘சாமி... அரியர் தேர்வு வழக்குல தீர்ப்பு நல்லபடியா வரணும்...’ மதுரை கோயிலில் மாணவர்கள் வழிபாடு

மதுரை:  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இன்று வர இருக்கிறது. இதற்கிடையில் இவ்வழக்கில்  அரியர் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்பு  அமைய வேண்டும் என வேண்டி,  மதுரையை சேர்ந்த சில மாணவர்கள், தல்லாகுளம் காந்திமியூசியம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த நூதன வழிபாடு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>