தடை மீறி வேல் யாத்திரை செல்ல முயற்சி சேலத்தில் பாஜ தலைவர் எல்.முருகன் கைது

சேலம்: சேலத்தில் நேற்று பாஜவின் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் குரங்குச்சாவடியில் நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு பேசும்போது, தமிழகத்தில் பாஜ கால் ஊன்ற முடியாது என கூறினார்கள். ஆனால் இன்று கிராமங்கள் வரை பாஜ பற்றி தான் பேசப்படுகிறது. வெற்றிவேல் யாத்திரை எந்த தடை வந்தாலும் தொடர்ந்து பயணிக்கும். திருச்செந்தூரில் அடுத்த மாதம் 7ம் தேதி பொதுமக்கள் திரண்டு இரண்டாம் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்.

நாம் கை காட்டுபவர் முதல்வராக இருப்பார் என்றார். மாநில துணை தலைவர்கள் நரேந்திரன், ராஜா, கனகசபாபதி, மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், பொதுச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோரும் பேசினர்.  இதையடுத்து திட்டமிட்டபடி வெற்றிவேல் யாத்திரைக்கு எல்.முருகன் உள்பட பாஜகவினர் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை  மேடையிலேயே தடுத்து நிறுத்தி எல்.முருகன் உள்பட 725 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Related Stories:

>