சரக்கு ரயிலில் ஏறி செல்பி : மின்சாரம் தாக்கி மாணவன் பலி

நெல்லை: நெல்லை அருகே தாழையூத்து சர்ச் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். நெல்லையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி இளநிலை ஆய்வாளர். இவரது மகன் ஜானேஸ்வர் (15). 10ம் வகுப்பு படித்து வந்தார். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு நேற்று வந்த இவர், 4வது பிளாட்பாரத்தில் நின்ற சரக்கு ரயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுத்ததாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். இது குறித்து சந்திப்பு ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>