×

டெல்லி, கேரளாவில் தொற்று அதிகரிப்பு: அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா குறைந்தது: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொேரானா தொற்று குறைந்துள்ளது என்று சேலத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் வனவாசியில் நேற்று நடந்த அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  தவிர்க்க முடியாத சூழலில் நீட் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த காலகட்டத்தில் ஏழை, எளிய மாணவர்களின் நிலையை நான் சிந்தித்தேன். ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத சூழல் உருவாகும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று எண்ணிப்பார்த்து,  எனது உள்ளத்தில் உதித்தது தான், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு திட்டம்.

இதில் நம்முடைய சேலம்  மாவட்டத்தில் மட்டும் 21 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியரும் மருத்துவம் படிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்  டெல்லியை பார், கேரளாவை பார் என்றார்கள். தற்போது அந்த மாநிலங்களில் தொற்று அதிகமாகி விட்டது. நமது அரசு எடுத்த துரித நடவடிக்கைகளால் கொரோனா படிப்படியாக குறைந்துள்ளது. வேளாண் பணிகள் 100 சதவீதம் நடந்து வருகிறது. தொழிற்சாலைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், ஜிடிபி 8 சதவீதம் இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. கொரோனா தொற்று காலத்தில் கூட அதிகளவு தொழிற்சாலைகளை தொடங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Edappadi Palanisamy ,reduction ,Kerala ,Delhi ,speech ,Tamil Nadu ,Corona ,government ,Salem , Delhi, Kerala on the rise: Corona decline in Tamil Nadu due to government action: Salem Chief Minister Edappadi Palanisamy's speech
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்