லடாக் பகுதியில் விபத்து கோவில்பட்டி ராணுவ வீரர் பலி

கோவில்பட்டி: கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (34). லடாக் பகுதியில் நாயக் ஆக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை ராணுவத்திற்கான வெடிபொருட்களை வாகனத்திற்கு மாற்றும்போது விபத்து ஏற்பட்டு கருப்பசாமி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து கருப்பசாமியின் மனைவி தமயந்தி (30) மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கருப்பசாமிக்கு கன்யா (7), வைஷ்ணவி (5) என்ற இரு மகள்களும், ஒரு வயதில் பிரதீப்ராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி, கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>