×

வங்கக் கடலில் காற்றழுத்தம் நீடிப்பு 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:வடகிழக்கு பருவமழை தற்ேபாது தமிழகத்தில் பெய்து வரும் நிலையில், குறிப்பிட்டு சொல்லும்படியாக வங்கக் கடலில் இதுவரை ஒரு புயல்கூட உருவாகவில்லை. இதனால் இந்த பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், குமரிக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. 6 மாவட்டங்களில் இயல்பு நிலையை தாண்டியும் மழை பெய்துள்ளது.

இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று தற்போது தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இந்த நகர்வின் காரணமாக ஒட்டப்பிடாரம் பகுதியில் அதிகபட்சமாக 120 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், இந்த காற்றழுத்தம் தென் கிழக்கு வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதையடுத்து, மதுரை, தேனி, சிவசங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில்இடி, மின்னலுடன் மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். தென்கிழக்கு வங்கக் கடல், மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல், தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், 3 நாட்களுக்கு அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags : districts ,Bay of Bengal ,Meteorological Center , Extension of barometric pressure in the Bay of Bengal Thunder in 9 districts, Lightning rain: Meteorological Center information
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...