2 நாள் பயணமாக நாளை மறுநாள் அமித்ஷா சென்னை வருகிறார்

மீனம்பாக்கம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பயணமாக நாளை மறுநாள் சென்னை வருகிறார். பாஜ முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக வரும் 21ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு பகல் ஒரு மணியளவில் சென்னை வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் மாலை 4 மணிக்கு, ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை கலைவாணர் அரங்கம் செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மீண்டும் அதே ஓட்டலில் தங்குகிறார். அங்கு பாஜ நிா்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து இரவில் அங்கு தங்குகிறார். மறுநாள் (22ம் தேதி) காலையில் காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். காலை 10 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Related Stories:

>