×

சென்னை யானைக்கவுனி கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த ஜெயமாலா உள்பட 3 பேரை கைது டெல்லியில் போலீஸ்

டெல்லி: சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயமாலா உள்பட 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையினர் அளித்த தகவலில் பேரில் டெல்லியில் அம்மாநில போலீஸார் கைது செய்தனர். சவுக்கார்பேட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா டெல்லியில் கைது செய்யப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமலா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயமாலா, விலாஸ், ராஜீவ் ஷிண்டே ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். மாமனார், மாமியார், கனவரை சுட்டுக் கொன்றதாக தேடப்பட்டு வந்த நிலையில் ஜெயமாலா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயமாலாவின் சகோதரர்கள் புனேவில் கடந்த வாரம் தனிப்படையால் கைது செய்யப்பட்டனர். புனேவில் கைது செய்யப்பட்ட கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கைதான 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ்டன் நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 11-ம் தேதி இரவு பைனான்ஸ் அதிபர், அவரது மனைவி, மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மருமகளே சொத்துக்காக இந்தக் கொலையை கூலிப்படையை வைத்து செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெருநகர சென்னை மாநகர கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணை கமிஷனர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கினர். இக்கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Tags : Chennai Yanaikkavuni ,Jayamala ,Delhi , Chennai Yanaikkavuni, murder case, Jayamala, arrested
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...