குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத காவல்துறையினருக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை: குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், சாலையோரங்களில் குழந்தைகள் கடத்தல் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. 2016-ம் ஆண்டிலேயே பல உத்தரவுகள் பிறப்பித்தும் போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை என ஐகோர்ட் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உள்துறை, சமூக நலத்துறை செயலாளர்கள், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் ஜன. 25-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>