×

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீர் ராஜினாமா

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா செய்தார். புதிதாக பொறுப்பேற்ற கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி ராஜினாமா செய்ததால் பீகார் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு கடந்த 17ம் தேதி பதவி ஏற்றனர். மாநில கல்வி அமைச்சராக மேவ்லால் சவுத்திரி பதவி ஏற்றார். தறபோது, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவரது பதவி பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இவர்  கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியில் இருந்தபோது,  ஊழல் செய்ததாக அவர் மீது விசாரணை செய்ய அப்போதைய கவர்னரும் தற்போதைய குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் விசாரணைக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவருக்கு, தற்போதைய அமைச்சரவையில் மீண்டும் கல்வி அமைச்சர் பதவி கொடுத்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான  லாலு பிரசாத் யாதவ் மேவ்லால் சவுத்திரிக்கு அமைச்சர் பதவி வழங்கியதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  மேலும் மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் கல்வி அமைச்சர் மேவ்லால் சவுத்திரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து  அவரிடம் நீண்ட ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கல்வி அமைச்சராக மேவ்லால் சவுத்திரியின் பதவியை ராஜினாமா செய்தார்.

Tags : Nitish Kumar ,Chaudhry ,Bihar , Bihar, Cabinet, Minister of Education, Mewalal Chaudhary, resigns
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை