×

கொரோனா தடுப்பில் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பின் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியின் மத்திய தொகுப்பில் இருந்து உள்ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய குடும்பநல அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பில் முன்கள பணியின்போது உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் விதமாக உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வார்டுகளில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு உள்ஒதுக்கீடு பொருந்தும் எனவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில், முதல் ஆரம்பமாக மத்திய தொகுப்பில் இருந்து 2020 - 21 கல்வியாண்டுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சை பணி,  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் வகையிலேயே இந்த உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது வேறு மருத்துவ பணியாளர்களாகவோ இருந்து கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த பலனை பெறலாம். இதைத்தவிர கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற சுகாதாரப்பணியாளர்கள், போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் உள்ஒதுக்கீடு பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே கொரோனா முன்கள பணியாளர்கள் யார் என்பதற்கான விவரத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்கள பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து, ஆபத்தான பணியை மேற்கொள்வதால் காப்பீடு தொகையாக 50 லட்சம் ரூபாய் நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது அதேமுறையை பயன்படுத்தி உயிரிழந்தோர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.


Tags : Harshwardhan ,forerunners ,announcement , Corona, Foreman, Heir, Medical Education, Allocation:, Harshwardhan
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...