தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை, தேனி, விருதுநகர், மாவட்டங்களுக்கு சிஜிதாமஸ் வைத்யன் நியமனம்; நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சண்முகம், நாமக்கல், கரூருக்கு சிவசண்முகராஜா; கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தி.மலை மாவட்டங்களுக்கு மா.வள்ளலார் நியமனம்; ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு ஆபிரகாம்; கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு கருணாகரன் செய்யப்பட்டுள்ளார். மேலும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு சஜ்ஜன்சிங் ரா.சவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>