திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளிக்குமாறு அழுத்தம் தரப்படுவதாக சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள அடக்குமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷின் பேசும் ஒலிப்பதிவு ஒன்று கேரள ஊடகங்களில் வலம் வருகிறது. அதில் தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் தரவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், கடந்த 6ம் தேதியில் இருந்து அமலாக்குத்துறையின் குற்றச்சாட்டு நகலை படிக்கவிடவில்லை.