×

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் சிமென்ட் ஷீட்டுகள் பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சி சார்பில் திருப்பத்தூர் நகரத்தில் கடந்த 1994ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் மாவட்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து செல்கின்றன. அதேபோல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில். பயணிகள் அமர்ந்து செல்லவும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக சிமென்ட் ஷீட்டுகள் அமைக்கப்பட்ட மேற்கூரை ₹20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிமென்ட் ஷீட்டுகள் சிதிலமடைந்து காற்று பலமாக வீசினால், ஒவ்வொன்றாக கீழே விழுந்து அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் மற்றும் நகராட்சி கடை ஏலம் எடுத்திருக்கும் கடைக்காரர்கள் மற்றும் பயணிகள் கடந்த 2015ம் ஆண்டு அமைக்கப்பட்ட சிமென்ட் ஷீட்டுகளை மாற்றி நவீன முறையிலான பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று திடீரென காற்றுடன் மழை பெய்தது. அந்த மழையில் மேலே இருந்த சிதிலமடைந்த மேற்கூரையின் சிமென்ட் ஷீட் பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் 1994ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பஸ் நிலைய மேற்கூரை தரமற்ற முறையிலும் கட்டப்பட்டுள்ளதாலும். சிமென்ட் ஷீட்டின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதாலும் அந்த சிமென்ட் ஷீட்டுகள், தற்போது உடைந்து கீழே விழுந்து வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு புதிய பஸ் நிலைய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Passengers ,bus stand ,Tirupati , Tiruppattur
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை