தாந்தோணிமலை பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது

கரூர்: தாந்தோணிமலை வடக்குத்தெரு, சவுரிமுடித்தெரு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வடக்குத்தெரு, சவுரிமுடித்தெரு, வஉசி தெரு போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

இதனால், இந்த பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள சமூதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது திரும்பவும் மழை பெய்வதற்கான சூழல் அதிகரித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் திரும்பவும் தண்ணீர் புகாத வகையில் தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடைப்பு உள்ள பகுதிகளை பார்வையிட்டு சரி செய்து விரைந்து தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>