×

மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11.61 லட்சம்

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல்கள் பக்தர்கள் ரூ.11.61 லட்சத்தை காணிக்ைகயாக செலுத்தி உள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்றும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், இந்த மாதத்திற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் ஆனந்த், கோயில் கண்காணிப்பாளர்கள் அருண் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 9 தட்டு உண்டியலில் 11 லட்சத்து 61 ஆயிரத்து 750 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கப்பட்டதால் தட்டுக்காணிக்கை உண்டியல் மட்டும் எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியல்களின் காணிக்கை எண்ணும் பணி மற்றோரு நாள் நடக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Masaniyamman , Masaniyamman Temple
× RELATED தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள்...