×

பழங்குடியினருக்கு மாடு வழங்குவதில் முறைகேடு: தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

பந்தலூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொக்காபுறம், தொரப்பள்ளி, வாழைத்தோட்டம், பந்தலூர் கூவமூலை மற்றும் ஸ்ரீயூர், ஆணைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் 600க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் வழங்கப்பட்டது. இதில் எந்த மாடுகளும் பல் கறப்பதில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் வயது முதிர்ந்த நோய்வாய்பட்டடுள்ள மாடுகளை வழங்கியதால், 40க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளது. இந்நிலையில் நேற்று கூடலூர் தி.மு.க., எம்.எல்.ஏ., திராவிடமணி பந்தலூர் அடுத்த கூவமூலை பழங்குடியினர் காலனியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூவமூலை பழங்குடியினர் காலனியில் 3 மாடுகள் இறந்துள்ளதாக பழங்குடியினர் மக்கள் எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்தனர். மேலும் மாடுகளுக்கு காப்பீடு தொகையாக பயனாளிகளிடமிருந்து ரூ.1500, வாகனச்செலவாக ரூ.2500 என மொத்தம் ரூ.4 ஆயிரத்தை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

இதில் காப்பீடு செய்ததற்கான ஆவணம் ஏதும் பயனாளிகளிடம் வழங்கப்படவில்லை என பழங்குடியினர் மக்கள் தெரிவித்தனர். இந்த மாடுகளுக்கு சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர் சின்னமாரியப்பன் என்பவர் உடல் சான்று மற்றும் மதிப்பு சான்று கொடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே பழங்குடியினர் மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கியதில் உள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கலைவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.

Tags : interview ,DMK ,MLA , Cow, DMK, MLA
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...