×

ஆண்டிபட்டி சிறுவன் அசத்தல்: இரண்டரை வயதிலேயே இந்தியச் சாதனையாளர்

ஆண்டிபட்டி: தேசியக்கொடியை பார்த்து நாட்டின் பெயரை சொல்லி அசத்தும் ஆண்டிபட்டி சிறுவன் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை சேர்ந்த தம்பதி ஜீவன் மாணிக்கம் - திவ்யா. இவர்களின் ஒரே மகன் ரினேஷ் ஆதித்யா. இரண்டரை வயதாகும் ரினேஷ் ஆதித்யாவுக்கு அபார ஞாபகசக்தி திறன் உண்டு. சிறுவனுக்கு தேசியக்கொடிகள் மூலம் நாடுகளின் பெயரை கூறுதல், இந்தியாவின் தற்போதைய மத்திய அமைச்சர்களின் பெயர்கள், உலக நாடுகளில் பிரசித்தி பெற்ற விமானங்களின் பெயர்கள், பல நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்களின் பெயர்கள், பிரசித்தி பெற்ற பிரபல கம்பெனிகளின் லோகோ மூலம் பெயர் கூறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றோர் அளித்தனர்.

இவற்றையெல்லாம் அப்படியே உள்வாங்கிக் கொண்ட சிறுவன், கற்றதை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். இந்த அசாத்திய திறமைக்காக இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் (இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்) இடம் பெற்றுள்ளார். மேலும், கலாம் விஷன் இந்தியா-2020ல் சான்றிதழ்களை பெற்றுள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Tags : achiever ,Andipatti ,Indian , Boy, record
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...