×

திருச்செந்தூர் கோயிலில் நாளை நடைபெற இருக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை; நாளை மறுநாள் நடைபெறும் திருக்கல்யானத்துக்கும் அனுமதி இல்லை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளையும், திருக்கல்யாணம் நாளை மறுநாளும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கடந்த சஷ்டி விழா கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த விழாவின் போது பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்ட பின்பு, முருகனின் திருக்கல்யாணத்தை காண்பார்கள். அந்த வகையில் 6 ஆம் நாளான நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கோயில் வளாகத்திற்குள் பல முருகன் கோயில்களிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 6, 7-ம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் காத்திருப்பதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://www.youtube.com/channel/UCDiavBtRKei0x1fYVupEw/live என்ற இணையதளத்தில் நேரலையாக காணலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Devotees ,ceremony ,Surasamara ,Thiruchendur ,Tirukkalyanam , At Thiruchendur temple, Surasamara, for devotees, is not allowed
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...