×

நியூயார்க்கில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் கொல்லி கொரோனா!: இன்று முதல் பள்ளிகளை மீண்டும் மூட மேயர் உத்தரவு..!!

அல்பானி: கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகள் இன்று முதல் மீண்டும் மூடப்படுகிறது. சீனாவில் பரவ தொடங்கிய உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு உலக நாடுகள் பலரும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சில மாதங்களில் தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்துவிடும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், நியூயார்க் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் மூட மேயர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பெறும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

மக்கள்தொகை அடர்த்தி காரணமாக நியூயார்க் நகரில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நியூயார்க்கில் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைரஸ் பரவல் சற்று குறைந்திருந்த போது நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அலையால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிக்கூடங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக நகர மேயர் பில் டி பல்சியோ தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,Mayor ,schools ,New York , New York, Corona localization, school, closure
× RELATED திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து...