பாக முகவர்கள் பாசறை கூட்டம்

திருத்தணி: திருத்தணி அடுத்த கேஜி கண்டிகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பாக முகவர்கள் பாசறை பயிற்சி கூட்டம் நடந்தது. தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி தலைமை வகித்தார். பாக முகவர்களுக்கு வாக்குசாவடியில் எவ்வாறு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு திருத்தம் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்வது குறித்து வழிகாட்டி புத்தகம் மாவட்ட பொறுப்பாளர் பாக முகவர்களுக்கு வழங்கினார். பயிற்சியில் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள திருத்தணி, திருவலாங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய மூன்று ஒன்றியங்களடங்கிய வாக்குச்சாவடி நிலையங்களுக்கு திமுக சார்பில் தொகுதி பாக முகவர்கள் பயிற்சி பெற்றனர்.

திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, ஆர். கே. பேட்டை ஒன்றிய செயலாளர்கள் பழனி, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய  அவைத் தலைவர் நரசிம்மராஜ் அனைவரையும் வரவேற்றார்.  மாவட்ட பொருளாளர்  சத்யராஜ் , பொதுக்குழு உறுப்பினர் ரகு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அகூர் மாணிக்கம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீ.ஜே.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், திருத்தணி நகர நிர்வாகிகள் ஜிஎஸ் கணேசன், அசோக் குமார்,  கராத்தே நாகராஜன், திருவலாங்காடு மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி குமரவேலன், இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.    

Related Stories:

>