×

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல், நீக்கல் போன்றவை குறித்தும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வாக்காளர் விழிப்புணர்வு பைக்பேரணி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மேலும் நிகழ்வின்போது தேர்தல் துணை வட்டாட்சியர் தனுஜா டயானா, பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் குறித்து எடுத்துரைத்ததோடு, பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் சரியாக உள்ளதா? எனவும் சரிபார்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



Tags : Voter Awareness Rally , Voter Awareness Rally
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி