கும்மிடிப்பூண்டி அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம்  தச்சூர் கூட்டு சாலையில் மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர்  மு.பகலவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் வரவேற்று உரையாற்றும்போது, ‘‘திமுக 2021ல் ஆட்சி அமைக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி,  பொன்னேரி சட்டமன்ற தொகுதிகளை வெல்ல திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்றார்.  இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்முடிப்பூண்டி கி.வேணு, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர்  க.சுந்தரம்,  ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், டாக்டர் பரிமளம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொது குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன்,ராமமூர்த்தி, சுப்பிரமணியன், அபிராமி குமரவேலு, ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், ரமேஷ்ராஜ், சுகுமாறன், சந்திரசேகர், சக்திவேல் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதா முத்துசாமி, பேரூர் செயலாளர்கள் அறிவழகன், அப்துல் ரஷீத், விஸ்வநாதன், மோகன், வெங்கடேசன் உள்ளிட்ட   பல்வேறு அணி நிர்வாகிககள், ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  கூட்ட முடிவில் சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் நன்றி கூறினார்.

Related Stories:

>