சர்வதேச சிலம்பம் போட்டி காஞ்சி மாணவர்கள் சாதனை

காஞ்சிபுரம்:  கொரோனா பாதிப்பால் ஆன்லைன் மூலமாக நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரை வாழ்த்தினார்.கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தேர்வான மாணவர்களுக்கான சர்வதேச சிலம்ப போட்டி இந்தாண்டு மே மாதம் மலேசியாவில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொரோன பாதிப்பு காரணமாக இப்போட்டி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதில் காஞ்சிபுரம் அஸ்வின் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் அ.அஷ்வின், வ.காமேஷ் ஆகியோர் முதலிடம்  பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.இதைதொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் அஸ்வின் ஆகியோர், காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், எஸ்பி சண்முகப்பிரியா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories:

>