கோயம்பேடு மார்க்கெட் நாளை இயங்கும்

அண்ணாநகர்: கொரோனா பரவலால் கடந்த மே 5ம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல்கட்டமாக சிறு, மொத்த காய்கறி கடைகள் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக வரும் 23ம் தேதி சிறு, மொத்த பழக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இதேபோல் வரும் 30ம் தேதி சிறு, மொத்த  காய்கறி கடைகள் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறியதாவது, “கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்க வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்திருந்தோம். மக்கள் கூட்டத்தை தவிர்க்க ஞாற்றுக்கிழமை  விடுமுறை அளித்துள்ளோம். அதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் மார்க்கெட் இயங்கும்” என தெரிவித்தார்.

Related Stories:

>