புதுவையில் இரவுநேர ஊரடங்கு ரத்து

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு  தளர்வு அறிவிக்கப்பட்டபோதிலும் இரவு ஊரடங்கு தொடர்ந்து  அமலில் இருந்தது. இதன் காரணமாக கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்ல புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இரவு நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று அதிரடியாக  திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலையில் விதிக்கப்பட்டிருந்த  தடையும் ரத்தாகி உள்ளது. இதுதவிர மதுபானக் கடைகள், ஓட்டல்கள்,  திரையரங்குகள், தொழிற்சாலைகள் வழக்கம்போல்  இயங்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அங்கு இரவு 11 மணி வரை கடைகள்  செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>