×

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின

சென்னை: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.தமிழகத்தில் ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படுவது ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 908 ஏரிகள் உள்ளன. அப்பகுதியில் சில நாட்களாக பரவலாக பெய்த மழையால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. காஞ்சிபுரத்தில், தென் மேற்கு பருவமழையின் போது, குறைந்த அளவே மழை கிடைக்கும். வடகிழக்கு பருவமழையை தான் முக்கியமானது. அதன்படி கடந்த  சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர், தாத்தனூர், குண்டுப் பெரும்பேடு உள்பட 48 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில், செம்பாக்கம், நன்மங்கலம், புளிக்கொடு இடும்பன் ஏரி, கோலம்பாக்கம், எம்என் குப்பம், சித்தேரி, உறையூர் ஏரி உள்பட 52 ஏரிகள் என 100 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.மேலும், 75 சதவீதத்துக்கு மேல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 ஏரிகளும்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 83 ஏரிகளும் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 110 ஏரிகள் என 222 ஏரிகளில் 50 சதவீதத்திற்குமேல் தண்ணீர் நிரம்பியுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : lakes ,Kanchipuram district , In the integrated Kanchipuram district 100 lakes reached full capacity
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!